MARC காட்சி

Back
கடவு காத அய்யனார் கோவில்
245 : _ _ |a கடவு காத அய்யனார் கோவில் -
246 : _ _ |a அய்யனார் கோயில்
520 : _ _ |a கடவு காத்த அய்யனார் கோயில் பச்சைப்பசேலென்ற இயற்கை எழில் விளங்கும் இடத்தின் நடுவே அமைந்துள்ளது. சுற்றிலும் வயல்வெளிகள் விளங்கும் வேளாண்மை மற்றும் கால்நடைகள் செழித்து வளரக்கூடிய இடமாக இவ்விடம் பண்டிலிருந்து விளங்கியுள்ளது என்பதை கணிக்கமுடிகிறது. இவ்விடத்தில் தலங்கொண்ட அய்யனார் கால்நடைகளையோ அல்லது வேளாண்நிலத்தையோ காத்து வந்துள்ளார். எனவே தான் கடவு காத்த அய்யனார் என்ற பெயர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் வழிபாடு, ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், கடவு காத அய்யனார் கோயில், பூலாங்குளம், ஆண்டார் கொட்டாரம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a ஆர்.சங்கர், கார்த்திக் இராமமூர்த்தி, வினோத் கமல்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a கடவு காத அய்யனார் பல்வேறு சாதியினருக்கு குலதெய்வமாய் விளங்குகிறார்.
914 : _ _ |a 9.9115475
915 : _ _ |a 78.1766072
923 : _ _ |a பூலாங்குளம் கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கடவு காத்த அய்யனார் கோயிலின் நுழைவாயில் முகப்புத் தோரணவாயிலில் அய்யனார் சுதைச் சிற்பங்கள் உள்ளன. கோயில் மதிற்சுவரின் முன்னே இரு பூதகணங்கள் நின்ற நிலையில் உள்ளன. கோயில் வளாகத்தில் அய்யனார் அரியணையில் அமர்ந்து குதிரை மீதேறி வருவதாக சுதைச்சிற்பமும், கருப்பசாமி குதிரை மீதேறி வருவதாக சுதைச்சிற்பமும் கோயிலின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் முகப்பில் அய்யனார் சுதைச்சிற்பம் காட்டப்பட்டுள்ளது. விநாயகர், முருகன், அய்யனார், சிம்மம் ஆகிய சிற்பங்களும் உள்ளன. கருவறையில் அய்யனார் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.
930 : _ _ |a கடவு காத்த அய்யனார் என்பதில் கடவு என்ற சொல்லுக்கு தணக்குமரம், வழி, எருமைக்கடா, ஆட்டுக்கடா, பக்கம் ஆகிய பொருள்களை அகராதி குறிப்பிடுகின்றது. மக்களுக்கான கால்நடைகளையோ அல்லது அவர்களின் வழியையோ அய்யன் பாதுகாத்து வந்ததால் இப்பெயர் அவருக்கு உண்டானது எனலாம்.
932 : _ _ |a கோயில் மதிற்சுவருடன் கூடியதாக உள்ளது. ஒரு தளமுடைய கருவறை விமானம் உடையது. கருவறை மற்றும் ஒரு சிறு மண்டபம் ஆகியவை கட்டிட அமைப்பாக காட்சியளிக்கிறது. திறந்த வெளியிலேயே பெரிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
933 : _ _ |a தனியார்
934 : _ _ |a சோணை முத்தையா சாமி கோயில், நொண்டிச்சாமி கோயில், பொன்னர் சங்கர் கோயில், முருகன் கோயில்
935 : _ _ |a மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் ஆண்டார் கொட்டாரம் சக்கிமங்கலம் சாலையில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a பூலாங்குளம்
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00408
barcode : TVA_TEM_00408
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00408/TVA_TEM_00408_மதுரை_பூலாங்குளம்_கடவு-காத-அய்யனார்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00408/TVA_TEM_00408_மதுரை_பூலாங்குளம்_கடவு-காத-அய்யனார்-கோயில்-0001.jpg

TVA_TEM_00408/TVA_TEM_00408_மதுரை_பூலாங்குளம்_கடவு-காத-அய்யனார்-கோயில்-0002.jpg

TVA_TEM_00408/TVA_TEM_00408_மதுரை_பூலாங்குளம்_கடவு-காத-அய்யனார்-கோயில்-0003.jpg

TVA_TEM_00408/TVA_TEM_00408_மதுரை_பூலாங்குளம்_கடவு-காத-அய்யனார்-கோயில்-0004.jpg

TVA_TEM_00408/TVA_TEM_00408_மதுரை_பூலாங்குளம்_கடவு-காத-அய்யனார்-கோயில்-0005.jpg

TVA_TEM_00408/TVA_TEM_00408_மதுரை_பூலாங்குளம்_கடவு-காத-அய்யனார்-கோயில்-0006.jpg

TVA_TEM_00408/TVA_TEM_00408_மதுரை_பூலாங்குளம்_கடவு-காத-அய்யனார்-கோயில்-0007.jpg